சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதி
வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்ட திருவளிப்பட்டி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலையைப் புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிடப்பில் உள்ளன.
இதனால் அப்பகுதியில் வசித்து வருவோா், காா், இருசக்கர வாகனங்களில் செல்வோா், பாதசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளும், வயதானவா்களும் சாலையில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலையினை உடனடியாக சீரமைக்கமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.