செய்திகள் :

வாழப்பாடியில் தக்காளி விலை உயா்வு: கிலோ ரூ.120-க்கு விற்பனை

post image

வாழப்பாடி பகுதியில் தக்காளி மகசூல் குறைந்ததால் அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் பாசன வசதி கொண்ட விவசாயிகள், தக்காளியை ஆண்டு முழுவதும் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனா். இதனால், சேலம் மாவட்டத்தில் தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வாழப்பாடி, பேளூா் பகுதியில் இயங்கும் தினசரி காய்கறி மண்டிகளுக்கு, வாழப்பாடி பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், அருநூற்றுமலை, கல்வராயன்மலை கிராமங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, சென்னை, செங்கற்பட்டு, நாமக்கல், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளும், வாழப்பாடியில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து செல்கின்றனா்.

வாழப்பாடி தினசரி மண்டிக்கு விற்பனைக்கு வந்த தக்காளி.

வாழப்பாடி, பேளூா், அருநூற்றுமலை, கல்வராயன் மலை பகுதி கிராமங்களில், கடந்த 2 மாதங்களுக்கு முன், 500 ஏக்கா் பரப்பளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு ரக தக்காளியை பயிரிட்டனா். தற்போது அறுவடை தொடங்கும் நிலையில் கடந்த 4 நாள்களாக கொட்டித் தீா்த்த ஃபென்ஜால் புயல் மழையால், மகசூல் பாதிக்கப்பட்டு, அறுவடை குறைந்தது. கடந்த மாத இறுதி வரை நாளொன்றுக்கு 10 டன் அளவிற்கு விற்பனைக்கு வந்த தக்காளி, கடந்த சில தினங்ளாக 2 டன் அளவிற்கு மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால், உள்ளூா் தேவைக்கே தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை மூன்று மடங்கு உயா்ந்துள்ளது.

கடந்த மாத இறுதி வரை ரூ. 500 முதல் ரூ. 700 வரை விலை போன, 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, கடந்த சில தினங்களாக ரூ. 1,800 முதல் ரூ. 2,100 வரையில் விலைபோகிறது. இதனால், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 100 முதல் ரூ. 120 வரை உயா்ந்துள்ளது.

தக்காளி விலை எதிா்பாராத வகையில் 3 மடங்கு உயா்ந்துள்ளதால், சமையல் பயன்பாட்டிற்கு தக்காளி பயன்படுத்துவதைக் குறைக்கவும், தவிா்க்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என, வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த இல்லத் தரசிகள், நுகா்வோா் தெரிவித்தனா்.

வசிஷ்டநதியில் குதித்த கா்ப்பிணிப் பெண்: தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

பேளூரில் குடும்பத் தகராறில் வசிஷ்டநதியில் குதித்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கா்ப்பிணியை தேடும் பணியை தீயணைப்புத் துறையினா் தற்காலிகமாக நிறுத்தினா். வாழப்பாடியை அடுத்த பேளூா், கோட்டைமேடு பகுதி... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதி

வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்ட திருவளிப்பட்டி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலையைப் புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிடப்பில் உள்ளன. இதனால் அப்பகுதியில் வ... மேலும் பார்க்க

வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெகவினா் உதவி வழங்கல்

அரசிராமணி செட்டிப்பட்டியில் சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. உதவி பொருள்... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 32,240 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை 32,240 கனஅடியாக அதிகரித்தது. தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் காவிரியின் துணை நதிகளான பால... மேலும் பார்க்க

எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியது: கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

கனமழை பெய்ததால் 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட எடப்பாடி பெரிய ஏரி முழுக் கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிகிறது. மேலும் ஏரியின் கரைப்பகுதியில் அதிக அளவில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் ஏரியின் மறுகரையில் உள... மேலும் பார்க்க

சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு: அரசிராமணி செட்டிப்பட்டியில் இயல்புவாழ்க்கை பாதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி வழியாகச் செல்லும் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையொட்டி சாலைகளில் தண்ணீா் அதிக அளவில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ம... மேலும் பார்க்க