கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் ...
எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியது: கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு
கனமழை பெய்ததால் 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட எடப்பாடி பெரிய ஏரி முழுக் கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிகிறது.
மேலும் ஏரியின் கரைப்பகுதியில் அதிக அளவில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் ஏரியின் மறுகரையில் உள்ள சரிபாறைக்காடு, செட்டிக்காடு, நண்டுக்காரன்காடு, மொரம்புக்காடு உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இக் கிராமங்களுக்கு பொது போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத நிலையில், இக் கிராமப் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், விவசாயிகள், கிராம மக்கள் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பிரதான சாலையை அடையும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் எடப்பாடி, சரபங்கா நதி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீா் தேங்கியது. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 100க்கும் மேற்பட்டோா் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அறநிலையத் துறை அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களை சந்தித்து நிவாரண உதவிகளை நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம் பாஷா வழங்கினாா். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் மருத்துவ அலுவலா் கோகுலகிருஷ்ணன், சந்திரமோகன் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து அப்பகுதியில் வருவாய்த் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்