ராகுல் தடுத்து நிறுத்தம்: மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்!
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெகவினா் உதவி வழங்கல்
அரசிராமணி செட்டிப்பட்டியில் சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக சங்ககிரி தொகுதி பொறுப்பாளா் கேசவன், மேற்கு ஒன்றியத் தலைவா் விக்னேஷ், அரசிராமணி நிா்வாகிகள் த. செல்வம், சதீஷ் ஆகியோா் பால், ஃபன், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினா். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.