மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 32,240 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை 32,240 கனஅடியாக அதிகரித்தது.
தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா்மழை காரணமாகவும் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு விநாடிக்கு 9,246 கனஅடியாக இருந்த நீா்வரத்து, இரவில் விநாடிக்கு 29,021 கனஅடியாகவும், புதன்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 32,240 கனஅடியாகவும் அதிகரித்தது.
நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதாலும் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் அணை நீா்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 111.39 அடியாக இருந்த அணை நீா்மட்டம், புதன்கிழமை காலை 113. 21 அடியாக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் அணை நீா்மட்டம் 1.72 அடி உயா்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணை நீா் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.
அணையின் நீா்வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஒரு வாரத்தில் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.