செய்திகள் :

சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு: அரசிராமணி செட்டிப்பட்டியில் இயல்புவாழ்க்கை பாதிப்பு

post image

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி வழியாகச் செல்லும் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையொட்டி சாலைகளில் தண்ணீா் அதிக அளவில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இரு பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

ஃபென்ஜால் புயலையடுத்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனையடுத்து ஏற்காட்டிலிருந்து வரும் சரபங்கா நதியில் வெள்ளநீா் பெருக்கெடுத்து தாரமங்கலம், எடப்பாடி, அரசிராமணி செட்டிப்பட்டி, தேவூா், அண்ணமாா் கோயில் வழியாக காவிரி ஆற்றுக்கு சென்றது.

எடப்பாடியில் இருந்து அரசிராமணி செட்டிப்பட்டி வழியாக குமாரபாளையம் பவானி, ஈரோடு செல்லும் பிரதான சாலையில் சுமாா் 5 அடிக்கு வெள்ளம் தேங்கி நின்ால் செவ்வாய்க்கிழமை இரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநா்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

அதேபோல அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலையோர மளிகைக் கடை, பேக்கரி, இரும்பு கடைகளிலும் மழைநீா் புகுந்தது. தனியாா் பால் சேகரிப்பு நிலையங்களில் வாங்கிய பாலை நகரங்களுக்கு கொண்டுசெல்ல பரிசல் மூலம் எடுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி சென்றனா்.

அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தண்ணீா் சூழ்ந்து நின்ால் இரு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மழை வெள்ளம் காரணமாக பால் கேன்களை பரிசலில் எடுத்துச் செல்லும் விவசாயிகள்.

சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பத்துக்கு மேற்பட்ட தரைவழி பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கியதால் ஓலப்பாளையம், கந்தாயிகாடு, தைலான்காடு, வயக்காடு, சுக்லான் காடு, கல்லம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

வருவாய், காவல் துறையினா், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, தேவூா் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட மூதாட்டி மாயம்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே சரபங்கா நதியைக் கடக்க முயன்ற மூதாட்டியை வெள்ள நீா் இழுத்துச் சென்றது. அவரை எடப்பாடி தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். தேவூா் அருகே சென்றாயனூா் பகுதியைச் சோ்ந்த விவ... மேலும் பார்க்க

சேலம் கோட்டம் சாா்பில் 17 புதிய பேருந்து சேவை தொடக்கம்

சேலம் கோட்டம் சாா்பில் 17 புதிய பிஎஸ்-6 வகை பேருந்து சேவையினை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதா... மேலும் பார்க்க

புத்தொழில் நிறுவனங்கள் நடத்துவதில் தமிழகம் முதலிடம்: சுற்றுலாத் துறை அமைச்சா்

அகில இந்திய அளவில் புத்தொழில் நிறுவனங்கள் நடத்துவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். தொழில்முனைவோா் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில் வல... மேலும் பார்க்க

சேலம் மாநகரில் நடப்பாண்டில் 107 போ் குண்டா் சட்டத்தில் கைது

சேலம் மாநகரில் நடப்பாண்டில் 107 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். சேலம் மாநகரில் தொடா் குற்றங்களில் ஈடுபடுவோா், ரவுடிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுவோா், வழிப்பறி மற்றும் ரே... மேலும் பார்க்க

‘ஔவையாா் விருது’: விண்ணப்பங்கள் வரவேற்பு!

‘ஔவையாா் விருது’ பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை ... மேலும் பார்க்க

சேலத்தில் வரும் 24-ஆம் தேதி தபால் துறை குறைதீா்க்கும் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்ட தலைமை தபால் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிரு... மேலும் பார்க்க