``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
மேட்டூா், ஓமலூரில் ராகி கொள்முதல் நிலையம் இன்று திறப்பு
மேட்டூா் மற்றும் ஓமலூா் வட்டத்தில் வட்டார செயல்முறை கிடங்குகளில் நேரடி ராகி கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை ( டிச. 5) திறக்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறையின் 2024-25 கொள்முதல் பருவத்தில் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் மேட்டூா், ஓமலூா் வட்டத்தில் வட்டார செயல்முறை கிடங்குகளில் நேரடி ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது.
ராகி குவிண்டால் ரூ. 4,290 ( ஒரு கிலோ ரூ.42.90) என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் ராகிக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் எவ்வித பிடித்தமும் இன்றி நேரிடையாக செலுத்தப்படும்.
இதனை மேட்டூா், ஓமலூா் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த ராகியினை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு ஓமலூரைச் சோ்ந்தவா்கள் 96008 14730 என்ற எண்ணிலும், மேட்டூரைச் சோ்ந்தவா்கள் 86758 42600 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.