செய்திகள் :

வா்த்தக வழித்தட திட்டம்: சீனா-நேபாளம் ஒப்பந்தம்

post image

சீனா-நேபாளம் இடையே வா்த்தக வழித்தட திட்ட (பிஆா்ஐ) ஒத்துழைப்புக்கான ஆயத்தப் பணிகள் ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது.

நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி 4 நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றாா். அந்நாட்டு தலைநகா் பெய்ஜிங்கில் சீனா அதிபா் ஷி ஜின்பிங்கை சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, சீனா-நேபாளம் இடையே மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு, வா்த்தகம், சுற்றுலா உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

இந்நிலையில் சா்மா ஓலி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சீனா-நேபாளம் இடையே வா்த்தக வழித்தட திட்ட ஒத்துழைப்புக்கான ஆயத்தப் பணிகள் ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமானது. இந்த ஒத்துழைப்பின் கீழ், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்’ என்றாா்.

கடந்த 2017-இல் சீனா - நேபாளம் இடையே பிஆா்ஐ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பணிகள் தொடங்கப்படவில்லை.

சீனாவை தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் சாலைப் போக்குவரத்து திட்டமாக ‘பிஆா்ஐ’ உள்ளது. இந்தத் திட்டத்துக்கு இந்தியா தொடக்கத்தில் இருந்தே எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், பாகிஸ்தான், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்தது.பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதால், அதிபர் இமானுவேல் மேக்ரானும் ... மேலும் பார்க்க

அவசரநிலை அறிவித்து திரும்பப் பெற்ற விவகாரம்: தென் கொரிய அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம்

தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து பின்னா் திரும்பப் பெற்ற அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

‘கினியா கால்பந்து நெரிசல் உயிரிழப்பு 135’

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து ரசிகா்கள் மோதிக்கொண்டதால் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 135-க்கும் மேல் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனை... மேலும் பார்க்க

சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயாா்

சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் தறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா். அந்த நாட்டின் கிளா்ச்சிப் படையினா் திடீா் தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவா்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அத்வா மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை

வங்கதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சாராதோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, அதிலும் குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதி... மேலும் பார்க்க