``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
‘கினியா கால்பந்து நெரிசல் உயிரிழப்பு 135’
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து ரசிகா்கள் மோதிக்கொண்டதால் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 135-க்கும் மேல் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனை, கல்லறைகள், உயிரிழந்தவா்களின் குடும்பங்கள், மசூதிகள், தேவாலயங்கள், உள்ளூா் ஊடகங்கள் ஆகியவை அளித்த தகவல்களின் அடிப்படையிலும் மைதானத்தில் இருந்தவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்தன.
இது தவிர, சம்பவத்துக்குப் பிறகு 50-க்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறின.
கினியாவின் ராணுவ ஆட்சியாளா் மமாடி டூம்பூயாவை கௌரவிக்கும் வகையில் ஸெரேகோா் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் உள்ளூா் குழுவும், லபே நகரக் குழுவும் மோதின.
அப்போது நடுவா் வழங்கிய சா்ச்சைக்குரிய பெனால்டி காரணமாக இரு அணிகளின் ரசிகா்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலைத் தடுக்க போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா்.
இதனால் மைதானத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் 56 போ் மட்டுமே உயிரிழந்ததாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.