Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
மதுரையில் ரத்தம் சொட்ட சொட்ட மாணவரை தாக்கிய சக மாணவர்கள்: அச்சத்தில் மக்கள்
மதுரை: மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 2 மாணவர்களை கும்பலாக சேர்ந்து சக மாணவா்கள் தாக்குவது மற்றும் கற்களை வீசும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரின் முக்கிய பகுதி தெப்பக்குளம். அந்த பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து இரண்டு மாணவர்களை தாக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோ காட்சியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர். மேலும் இரண்டு மாணவர்களை கும்பலாக சேர்ந்து இருண்ட குழுக்களாக பிரித்து ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒரு மாணவரை சரமாரியாக தாக்குகின்றனர். மூக்கில் ரத்தம் கசிந்தவாறு புத்தக பையை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க |மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம்: வைரலாகும் விடியோ!
தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவர்கள் மீது கற்களை வீசும் காட்சிகளும் இடம்பெற்றிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பகுதியில் 24 மணி நேரம் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் இருந்து வரும் வேலையில் ஒரே பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து இரண்டு மாணவர்களை தாக்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,பள்ளி மாணவர்களின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.