Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பியில் அசத்தும் புதிய தொடர்! இந்த வார டிஆர்பி!!
அன்னம் தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே டிஆர்பியில் முன்னணியில் உள்ளது. மக்களிடையே இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர்களை இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், இளம் வயதினரும் விரும்பிப் பார்க்கின்றனர். ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தொடரை, டிஆர்பி மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 9.60 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலிருந்து, முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மூன்று முடிச்சு தொடர் 9.26 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, முதல் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிங்கப் பெண்ணே தொடர் 9.16 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, மூன்றாம் இடத்தில் உள்ளது.
தொடங்கிய முதல் வாரத்திலேயே அன்னம் தொடர் 8.69 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
இராமாயணம் தொடர் 8.55 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: செளந்தர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
மருமகள் தொடர் இந்த வாரம் 8.45 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 7.64 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 6.32 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும், 6.09 டிஆர்பி புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி தொடர் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
சன் செய்திகள் 5.70 டிஆர்பி புள்ளிகளுடன் 9வது இடத்தையும், ஆஹா கல்யாணம் 5.54 டிஆர்பி புள்ளிகளுடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.