Coolie: `ஏய்ய்ய் நவுர்றா...' - 'கூலி' படத்தின் க்ளிம்ஸ் வீடியோ இதோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'கூலி'. பரபரப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பை ஜனவரி மாதத்தோடு முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் தேவா எனும் பாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஷோபின் ஷாகிர், ரெபா மோனிகா ஜான் என பலரும் நடித்து வருகின்றனர். சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு இப்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. பாலிவுட் ஸ்டாரான அமீர் கான், இந்த ஷெட்யூலில் ரஜினியுடன் இணைகிறார் என்கிறார்கள். நடிகர் உபேந்திராவுடன் அமிர் கான் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, 'கூலி'யின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.