Dhoni: `அன்று தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை' - RPS கேப்டன் பதவி நீக்கம் குறித்...
Gukesh : `அன்று மேக்னஸ் ஜெயித்தபோது என் நாட்டுக்காக கண்ட கனவு..!' - உலக சாம்பியன் குகேஷ் நெகிழ்ச்சி
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆகியிருக்கும் இந்திய வீரர் குகேஷ், இளம் உலக சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செஸ் உலக சாம்பியன் குகேஷ், ``என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் இது. ஆறேழு வயதில் செஸ் விளையாடத் தொடங்கிய நாள் முதல் இதுபற்றி கனவு கண்டிருக்கிறேன். 10 வருடங்களுக்குப் பிறகு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். எல்லா செஸ் வீரர்களும் இந்த இடத்துக்கு வர விரும்புவார்கள்.
ஆனால், வெகு சிலருக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது அந்த வெகுசிலரில் ஒருவனாக இருக்கிறேன். முதலில் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு தேர்வானது முதல் அனைத்தும் கடவுள் இல்லாமல் சாத்தியமில்லை.
இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சாம்பியன் பட்டம் இந்தியாவிடமிருந்து சென்றது. 2013-ல் கண்ணாடி அறைக்கு வெளியே இருந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒருநாள் நானும் அந்த இடத்தில் இருப்பேன் என்று நினைத்தேன்.
அன்று மேக்னஸ் வெற்றிபெற்றபோது, சாம்பியன் பட்டத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர விரும்பினேன். இன்று அது நிறைவேறியிருக்கிறது. என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் இது. என்னை நேசிப்பவர்களுக்காகவும், எனது நாட்டுக்காகவும் இதைச் செய்திருக்கிறேன். இதைவிட வேறெதுவும் சிறந்ததாக இருக்க முடியாது." என்று கூறினார்.
குகேஷ் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் மோடி உட்பட தலைவர்கள், செஸ் வீரர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...