Dhoni: `அன்று தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை' - RPS கேப்டன் பதவி நீக்கம் குறித்...
ரோஜா - 2 தொடர் அறிவிப்பு!
ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.
ரோஜா தொடரில், ரோஜாவாக பிரியங்கா நல்காரியும், அவரது கணவர் அர்ஜுனாக ஷிபு சூர்யனும் நடித்திருந்தனர். இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்து நிலையில், டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இத்தொடர் இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில், ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சரிகம தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ரோஜா தொடரின் முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரியே, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரை சரிகம நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், இத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் முன்னோட்டக் காட்சி தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஜா முதல் பாகம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், 2-ம் பாகல் சரிகம யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.