Dhoni: `அன்று தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை' - RPS கேப்டன் பதவி நீக்கம் குறித்...
கோவை: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!
கேரள மாநிலம், பட்டனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம். இவர் தன் மனைவி ஷீபா, மருமகள் அலினா தாமஸ் மற்றும் 2 மாதமே ஆன பேரன் ஆருண் ஆகியோருடன் இன்று காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர்.
கார் கேரளாவைக் கடந்து கோவை அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜேக்கப் ஆபிரகாம், ஷீபா மற்றும் ஆருண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அலினா தாமஸ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுக்கரை காவல்துறையினர் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தான் லாரியை ஓட்டி வந்துள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “நீலாம்பூர் - மதுக்கரை நான்கு வழிச்சாலை குறுகியிருப்பதால் இந்தப் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.
சாலையை விரிவுபடுத்துவதற்கான பணிகளும் தொடங்கவில்லை. அரசு உடனடியாக அந்த சாலையை விரிவுபடுத்துவதற்கான பணிகளை தொடங்கி விபத்து அபாயத்தை குறைக்க வேண்டும்.” என்றனர்.