15 நிமிடங்கள் முன்பு கூட வெற்றி சந்தேகம்: குகேஷ் ஆட்டம் பற்றி விஸ்வநாதன் ஆனந்த்
விக்கெட் ஆகாமலே நடந்து சென்றது ஏன்? கிண்டலுக்குள்ளானது குறித்து மிட்செல் மார்ஷ் விளக்கம்!
பார்டர் - கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வீசிய ஓவரில் மிட்செல் மார்ஷ் அவுட் ஆகாமலே வெளியேறியது பேசுபொருளானது.
களத்தில் உள்ள நடுவரும் விக்கெட் கொடுக்க மிட்செல் மார்ஷ் ரிவிவ் எடுக்காமலே சென்றார். பின்னர் விடியோவில் பார்க்கும்போது பந்து பேட்டில் படவே இல்லை.
அஸ்வினும் பந்து பேட்டில் பட்டதா என ஆச்சரியமாகக் கேட்பார். பின்னர் இது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் மிட்செல் மார்ஷை கிண்டல் செய்தார்கள்.
இது குறித்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
நான் பந்து பேட்டில் பட்டதென நினைத்தேன். அது குறித்து களத்தில் இருந்த டிராவிஸ் ஹெட்டிடம்கூட கேட்கவில்லை. எனக்கு அந்த நிகழ்வு மிகுந்த அவதிக்குள்ளானது. இன்ஸ்டாகிராமில் நான் தலைப்பு செய்தியாகிவிட்டேன்.
உணமையாகவே பந்து பேட்டில் பட்டதென நினைத்துதான் நான் நடந்து சென்றுவிட்டேன்.
ஓய்வறையில் இது குறித்து நகைச்சுவையே நடந்தது. நாதன் லயன் ‘அதை அடித்திருந்தால் என்னாகியிருக்கும்’ எனக் கேட்டபோது நான், ’ஆமாம், அடித்து நொருக்கியிருக்கலாம்’ என்றேன். அதற்கு டிராவிஸ் ஹெட், ’அஸ்வின் கையில் பந்து சென்றிருக்கும்’ என்றார். என்னுடைய கெட்ட நேரம் அனைவரும் சிரித்தார்கள் என்றார்.