Haiti: மாந்திரீகத்தால் மகன் இறந்ததாக ஆத்திரம்... 200 பேரைக் கொன்ற நபர்! - என்ன ந...
பும்ராவுக்கு எதிராக ரன்கள் குவிப்பது நல்ல அனுபவம்: ஆஸி. இளம் வீரர்
ஆஸ்திரேலிய அணியின் இளம் தொடக்க வீரர் மெக்ஸ்வீனி பும்ரா எதிர்கொள்வது குறித்து பேசியுள்ளார்.
இந்த பார்டர் - கவாஸ்கர் தொடரில் மெக்ஸ்வீனி முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 2 போட்டிகளில் 59 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ஆனால், இரண்டாவது டெஸ்ட்டில் முக்கியமான நேரத்தில் 39 ரன்கள் எடுத்து அதிகமான பந்துகள் விளையாடினார்.
இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் (4 இன்னிங்ஸில்) 3 முறை மெக்ஸ்வீனியை பும்ரா அவுட் ஆக்கியுள்ளார்.
தற்போது, இது குறித்து மெக்ஸ்வீனி கூறியதாவது:
தன்னம்பிக்கை பிறந்துள்ளது
என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்திலேயே ஜஸ்பிரீத் பும்ரா மாதிரியான ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்வதைவிட கடினமானது எதுவும் இல்லை.
அடிலெய்டில் அவரது பந்துவீச்சை எதிர்கொண்டது சற்று தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவருக்கு எதிராக அதிகமான பந்துகள் விளையாடும்போது இன்னமும் நன்றாக விளையாடுவேன்.
இது சவாலான விஷயம்தான், சந்தேகமே இல்லை. ஆனால், அடிலெய்டில் டெஸ்ட்டில் இருந்து சிறிது தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது. அதை இந்தத் தொடர் முழுவதும் தொடருவேன் என்று நம்புகிறேன்.
பும்ரா வித்தியாசமானவர்
முதல்முறையாக பும்ராவின் பந்துகளை ஆடும்போது வித்தியாசமான பந்துவீச்சாளராக இருந்தார். அதனால், அவர் பந்துவீசும் கோணம், கிரீஸில் எங்கிருந்து பந்தினை வீசுகிறார் என்பதற்கு நான் தகவமைய வேண்டும்.
பெர்த்தில் அவரிடமிருந்து 2 நல்ல பந்துகளை எதிர்கொண்டேன். அதை அடிக்க முயற்சித்து கீழ்தாடையில் அடி வாங்கினேன். நான் செய்தது சரிதான் என நினைக்கிறேன்.
அடிலெய்டில் மீண்டும் என்னை ஆட்டமிழக்கச் செய்தார். உலகத் தரமான பந்துவீச்சாளருக்கு எதிராக ரன்களை குவிக்க திட்டமிடும் அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
காபா ஆடுகளத்தில் இன்னும் அதிகமாக விளையாடும்போது அவரது பந்துகளை நன்றாக அடித்து ஆடுவேன் என்றார்.