செய்திகள் :

'நீதித்துறை வலுவாக இருந்தால் மோடியும் யோகியும் சிறையில் இருப்பார்கள்' - புரி சங்கராச்சாரியார்

post image

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் பற்றி சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி கூறியதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்து பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் வலுவான நீதித் துறை இருந்தால் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சிறையில் இருப்பார்கள் என சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி கூறியிருந்தார்.

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஸ்ரீ கோவர்தன பீடத்தின் தற்போதைய மற்றும் 145-வது ஜகத்குரு நிச்சலானந்த சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், கடந்த செவ்வாய்க்கிழமை உஜ்ஜைனி மகாகாளேஸ்வா் கோயில் நிர்வாகக் குழுவின் தர்மசபையில் கலந்துகொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய நிச்சலானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்தியாவில் வலுவான நீதித்துறை இருந்தால் மோடியும் யோகியும் சிறையில் இருப்பார்கள்" என்றார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!

இதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவிக்கும்விதமாக, தனது எக்ஸ் பக்கத்தில், சுவாமி நிச்சலானந்த சரஸ்வதியின் கூற்றைப் பகிர்ந்து 'அச்சமற்ற ஜகத்குரு' என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மீது சுப்பிரமணியன் சுவாமி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியை 'பொய்களின் தலைவர்' என்று கூறியதுடன் 2014 மக்களவைத் தேர்தலில் மோடிக்காக பிரசாரம் செய்ததற்காக பிராயச்சித்தம் செய்வேன் என்று கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்: அமைச்சரவை ஒப்புதல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா... மேலும் பார்க்க

உயர்நீதிமன்ற நீதிபதி மீது பதவி நீக்கத் தீர்மானம்!

முஸ்லிம்கள் மீதான சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவி நீக்கத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் பி... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது... மேலும் பார்க்க

55 மணிநேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாபமாக பலியானார். ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் ஆர்யன் தவறிவிழுந்துள்ளார்.55 மணி நேரத்துக்கும் மேலான மீட்புப் பணிகளுக... மேலும் பார்க்க

தில்லியில் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவு!

தில்லியில் மிகக்குறைந்தளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடைகாலங்களில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது.தில்லியில் வியாழக்கிழமையன்... மேலும் பார்க்க

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்பு!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரளத்தின் வைக்கத்தில் நடைபெற்றுவருகிறது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார... மேலும் பார்க்க