சென்னை: அரசு மருத்துவமனையில் பண மோசடி - அதிகாரிகள் சிக்கிய பின்னணி!
147 ஆண்டுகளுக்குப் பின்.. கவாஸ்கர், குக் சாதனையை சமன் செய்வாரா கோலி?
இந்திய வீரர் விராட் கோலி 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1877 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகவிருக்கிறார். அவர் அந்தச் சாதனையைப் படைப்பாரா என ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் முக்கியமான 5 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.
டி20: பாகிஸ்தானிடம் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா
இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை 2 போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஒரு சதம் உள்பட 123 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும், சதம் தவிர்த்து மற்ற 3 இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் அவுட்டானார்.
அதே நேரத்தில் சனிக்கிழமை நடைபெறும் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களில், ஏதாவது ஒரு இன்னிங்ஸில் சதம் விளாசினால் 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மைதானங்களிலும் சதம் விளாசிய மூன்றாவது வெளிநாட்டவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
‘அகாய் கோலி’யின் அர்த்தத்தை அதிகம் தேடிய ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, அடிலெய்ட், மெல்போர்ன், பிரிஸ்பேன், பெர்த் ஆகிய 5 மைதானங்களிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
விராட் கோலி சிட்னி, அடிலெய்ட், மெல்போர்ன், பெர்த் ஆகிய மைதானங்களில் சதம் அடித்துள்ளார். ஆனால், பிரிஸ்பேனில் சதம் அடித்தது கிடையாது.
சுனில் கவாஸ்கர் 1977 ஆம் ஆண்டு பிரிஸ்பேன், பெர்த், மெல்போர்ன் ஆகிய மைதானங்களிலும், 1985 ஆம் ஆண்டு அடிலெய்ட், சிட்னி மைதானங்களிலும் சதம் அடித்துள்ளார்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 தரவரிசையில் கீழிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்..! மீண்டு வருவாரா?
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் குக், 2006 ஆம் ஆண்டு பெர்த் மைதானத்திலும், 2010-2011 தொடரில் பிரிஸ்பேன், அடிலெய்ட், சிட்னி மைதானங்களிலும், 2017 ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்திலும் சதம் அடித்துள்ளார்.
மொத்தமாக வெளிநாட்டவர்களில் ஆஸ்திரேலிய மைதானங்களில் இங்கிலாந்தின் ஜாக் ஹாப்ஸ் 9 சதங்களும், வால்டர் 7 சதங்களும், விராட் கோலி 7 சதங்களும் விளாசியுள்ளனர். இன்னும் ஒரு சதம் விளாசினார் விராட் கோலி 2-வது இடத்துக்கு முன்னேறுவார்.
2014-2015 ஆம் ஆண்டு பார்டர்- கவாஸ்கர் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் விராட் கோலி 2 இன்னிங்ஸ்கள் முறையே 19 மற்றும் 1 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.