செய்திகள் :

புதுச்சேரி: `பள்ளியை இடித்துவிட்டு ரெஸ்டோ பார் கட்டுகிறோமா?’ - காங்கிரஸ் புகாருக்கு சபாநாயகர் பதில்

post image

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``என்னுடைய தொகுதியான மணவெளி சின்ன வீராம்பட்டினத்தில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் சேதமடைந்திருக்கிறது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் என்னை சந்தித்து பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரும்படி கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அந்த பள்ளியை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். கடந்த 14.9.2024 அன்று கல்வித்துறை அது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையில், புதிய கட்டடம் கட்டிய பிறகு மீண்டும் பள்ளி அங்கு இடமாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் செல்வம்

ஆனால் இரண்டு முறை முதலமைச்சராகவும், அமைச்சராகவும் பதவி வகித்து தற்போது எம்.பி-யாகவும் பொறுப்புமிக்க பதவியில் உள்ள வைத்திலிங்கம்,  பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு ரெஸ்டோ பார் அமைக்க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றாச்சாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொறுப்புமிக்க பதவியில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும். அதைவிடுத்து யாரோ சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு பேசக் கூடாது. அரசு கட்டடத்தில் ரெஸ்டோ பார் அமைக்க முடியுமா என்பதை அவர்தான் விளக்க வேண்டும். கடந்த 30-ம் தேதி ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணைகள் திறக்கப்பட்டதால், ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

அவற்றை மத்தியக்குழு பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசும் உடனடியாக ஆய்வுக் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதனிடையே புயலில் பாதித்த மக்களை கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உரிய நிவாரணம் அறிவித்துள்ளார். அந்த நிவாரணத்தில் முதல்கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5,000/- பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புயல் நிவாரணம் வழங்காத நிலையில், புதுவையில் நிவாரணத்தை வழங்கியிருக்கிறோம். புதுவையை தாக்கிய புயல் பாதிப்பு குறித்து எம்.பி வைத்திலிங்கம் நாடாளுமன்றத்தில் பேசியது என்ன ?

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

புதுவை அரசு அதிகாரிகள் சேத மதிப்பு குறித்த அறிக்கை தயாரிக்க காலதாமதம் ஆகிவிட்டது. அதனால்தான் முதல்கட்ட நிவாரணம் உடனடியாக கிடைக்கவில்லை. புதுச்சேரியில் இருக்கும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர். ஒரு சில அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொண்டாலும், மற்றவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றனர். முதலமைச்சர் கருணையோடு அவர்களை மன்னித்து வருகிறார். அமைச்சரவை அனுப்பும் கோப்புகளின் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆணை பிறப்பித்துள்ளார். ஆனாலும், அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். அதனால் அதிகாரிகள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

`உயிர் உள்ள வரையில்' - வைக்கம் பெரியார் நினைவகத்தில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலினின் படம்

கேரளாவில், வைக்கம் மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தினரும் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி 1924-ல் போராட்டம் நடைபெற்றது.இதில், பெரியார் கலந்துகொண்ட பிறகு வலிமையடைந்த இந்தப் போராட்டத்தின் விளை... மேலும் பார்க்க

குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும் கட்சியா எதிர்க்கட்சிகளா?!

குளிர்கால கூட்டத்தொடர்கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 20-ம் தேதி வரையில் நடக்கிறது. முன்னதாக எதிர்கட்சிகளிடம் 'அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பழுதடைந்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி; அச்சத்தில் மக்கள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் பகுதியில், 1வது வார்டில் அமைந்துள்ளது இந்த இடம்.இவ்விடத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதனைச் சுற்றி ஏழு ஊர்கள் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமை... மேலும் பார்க்க

Adani Ports: $553 மில்லியன் அமெரிக்க கடனை நிராகரித்த அதானி துறைமுகம்..! பின்னணி என்ன?

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கண்டெய்னர் முனையமாக உருவாகி வருகிறது கொழும்பு மேற்கு சர்வதேச முனையம். இந்த முனையத்தில் அதானி துறைமுகத்திற்கு 51 சதவிகிதம் பங்கு உண்டு. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம... மேலும் பார்க்க

Vaikom : "பெரியாருக்கு புகழ் மாலை; கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன்" - மு.க.ஸ்டாலின் உரை

பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருக... மேலும் பார்க்க