Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
பிக் பாஸ் வரலாற்றில் மோசமான கேப்டன் ரஞ்சித்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மிக மோசமான கேப்டனாக ரஞ்சித் மாறிவருவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பலர் கருத்து முரண்பாடு காரணமாக சண்டையிட்டுக்கொள்ளும் நிலையில், வீட்டின் தலைவரான ரஞ்சித் எதிலும் தலையிட்டு தீர்வுகாணாமல் வேடிக்கை பார்ப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் கேப்டனாகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்காக போட்டிகளும் வைக்கப்படும். அந்தவகையில் இந்த வாரத்தின் கேப்டனாக ரஞ்சித் தேர்வாகியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக ரஞ்சித் கேப்டனாகியுள்ளார். இந்த வாரத்தில் தொழிலாளர் டாஸ்க் போட்டியாக வைக்கப்பட்டுள்ளது.
இதில், ஒரு அணியினர் தொழிலாளர்களாகவும், மற்றொரு அணியினர் மேலாளர்களாகவும் நடித்து விளையாட வேண்டும்.
இதில், கேப்டனாக உள்ள ரஞ்சித் தொழிலாளர் அணியில் உள்ளார். எனினும் தொழிலாளர் - மேலாளர் அணிகளுக்கு இடையே எழும் எந்தவொரு பிரச்னையிலும், அது பெரிதாக இருக்கும்போது குறுக்கிட்டு தீர்வு காணாமல், பேசி முடித்த பிறகு ரஞ்சித் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.
முத்துக்குமரன் தொழிலாளியாக சரியாக பணிபுரியாதபோது, மேலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதும் வீட்டின் தலைவனாக ரஞ்சித் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.
அன்ஷிதா - ராணவ் - செளந்தர்யா சண்டையின்போதும் ரஞ்சித் தலையிட்டு வாக்குவாதத்தை நிறுத்தாமல், விசாரணை நடத்தாமல் இருந்ததால் அது பூதாகரமானது.
இவ்வாறு பிரச்னை எழும்போது பிக் பாஸ் வீட்டின் தலைவனாக இருந்து அதற்கு தீர்வு காணாமல், சக போட்டியாளராகவே அமைதி காப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8-ல் மட்டுமல்லாமல், பிக் பாஸ் வரலாற்றிலேயே ரஞ்சித் போன்ற ஒரு கேப்டன் இருந்திருக்கமாட்டார் என முன்னோட்ட விடியோக்களில் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பல இடங்களில் பிரச்னையின்போது குறிக்கிட்டு, சண்டையை நிறுத்த முயன்றாலும் போட்டியாளர்கள் வாக்குவாதங்களைத் தொடர்ந்தவாறே உள்ளதால் அதனை நிறுத்துவதில் ரஞ்சித் சற்று சிரமத்தை உணர்வதாகவும் தெரிகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: செளந்தர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?