சென்னை: அரசு மருத்துவமனையில் பண மோசடி - அதிகாரிகள் சிக்கிய பின்னணி!
காதலரை மணந்தார் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தன் காதலரை திருமணம் செய்துகொண்டார்.
கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில நாள்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தன் காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “15 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். எப்போதும் தொடரும்” என தெரிவித்ததுடன் காதலர் ஆண்டனிதான் என்பதையும் குறிப்பிட்டார்.
இவர்களின் திருமணம் கோவாவில் டிசம்பர் மாதம் நிகழும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணம் ஹிந்து முறைப்படி நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் விஜய் உள்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.