'நீதித்துறை வலுவாக இருந்தால் மோடியும் யோகியும் சிறையில் இருப்பார்கள்' - புரி சங்...
55 மணிநேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாபமாக பலியானார்.
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் ஆர்யன் தவறிவிழுந்துள்ளார்.
55 மணி நேரத்துக்கும் மேலான மீட்புப் பணிகளுக்குப் பிறகு, நேற்று இரவு ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அவர், மயக்க நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
2030 கால்பந்து உலகக் கோப்பை குறித்து ரொனால்டோ நெகிழ்ச்சி..!
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “ஆழ்துளையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு அனைந்து உயிர்க்காக்கும் வசதிகளும் செய்யப்பட்டது. இருப்பினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்” என்றனர்.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கலிகாட் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆர்யன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது தாய் கண் முன்னே ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவரை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சீதாவாக நடிக்க அசைவம் சாப்பிடவில்லையா? ஆவேசமான சாய் பல்லவி!
மீட்புக் குழுவினர் அங்கு வந்தவுடன், குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் உள்ளே நடவடிக்கைகளை கண்காணிக்க கேமராவும் அனுப்பப்பட்டது. சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றை ஒட்டியே அதற்கு இணையாக மற்றொரு குழி தோண்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் கூறுகையில், “சிறுவனை மீட்கும் பணியில் எண்ணற்ற சவால்கள் இருந்தன. அந்தப் பகுதியில் நீர்மட்டம் 160 அடியாக இருந்தது. குழந்தையின் எந்த அசைவையும் கேமராவில் படம்பிடிப்பது கடினம். மீட்பு பணியாளர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளனர்.