செய்திகள் :

`மகாகவியென்றாலே பேராற்றல், பேரதிசயம்...' - வியக்கும் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி!

post image

மகாகவி என போற்றப்படும் பாரதியாரின் 143 பிறந்தநாளான நேற்று தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பாரதியின் முழு படைப்பு தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு, பாரதியாரின் சிறப்புகள் குறித்து பேசியுள்ளார்.

பாரதியாரின் திரு உருவச்சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பலரும் பாரதியின் படைப்புகளையும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பாரதியார் பேரன் நிரஞ்சன் பாரதி

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதியைச் சந்தித்தோம். பாரதியார் குறித்து நம்மிடம் பகிர்ந்த பேரன் நிரஞ்சன் பாரதி, "பாரதி என்பது பேராற்றல், பெரும் பிரபஞ்சம், பேரதிசயம், மகா சக்தி, உந்து சக்தி போன்ற பல வடிவங்களாக நான் அவரை உணர்கிறேன். 38 ஆண்டுக்காலம் மட்டுமே வாழ்ந்த பாரதியார், 138 ஆண்டுகள் வாழ்ந்ததைவிட அதிகமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

சொந்தமாக வீடு கிடையாது, அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனாலும், எதைப்பற்றியும் கவலை பட்டதில்லை. அவரின் கொடையுள்ளமும், பிற உயிரினங்களின் மீதான கருணையும் தனித்துவமானது. அநீதியைக் கண்டு அறச்சீற்றத்துடன் கொதித்தெழுந்தார். அவருடைய ஒவ்வொரு சொல்லும் விவரிக்க முடியாத ஆழத்தையும் அர்த்தத்தையும் கொண்டிருக்கும். அதனால் தான் பாரதியின் கவிதைகளுக்கு விளக்க உரை எழுதும் உன்னதமான பணியைத் தொடங்கியிருக்கிறேன். பாரதியின் வரிகளுக்கு விளக்க உரையா என ஆச்சர்யத்தில் பல கேட்கிறார்கள். சில பாடல்கள் மிகவும் எளிமையாக புரியும். சில பாடல்கள் எல்லோருக்கும் முழுமையாக புரியும் என்று சொல்ல முடியாது.

பாரதியார் பேரன் நிரஞ்சன் பாரதி

என்னுடைய இந்த விளக்க உரை பாரதியை தொடர்புகொள்ளும் ஊடகமாக இருக்கும். பாரதியின் தமிழ் தாக்கம் தான் இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு இணைய வழியில் தமிழை எழுதவும் பேசவும் கற்றுக் கொடுத்து வருகிறேன். சினிமா பாடலாசிரியராகவும் கவிஞராகவும் இயங்கி வருகிறேன். ஒரே சமயத்தில் மூன்று குதிரைகளில் பயணிப்தை போல இலக்கிய உலகில் பயணிக்க முடிகிறதென்றால் அதற்கு மகாகவி மட்டுமே காரணம்" என்றார்.

Book Review: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகம் குறித்த விசிக எம்.பி ரவிக்குமாரின் விமர்சனம்

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் குறித்து எழுத்தாளரும், விசிக-வின் பொதுச்செயலாளருமான எம்.பி ரவிக்குமார் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில், " விகடன் பிரசுரமும்... மேலும் பார்க்க

`எனக்கு இன்னொரு பேர் இருக்கு!'; மிஷாவ்வின் சூதாட்ட சாம்ராஜ்யம் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 5

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கறுப்பர்களிடையே மார்கஸ் கார்வேயின் இயக்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.மறுபுறம் கறுப்பர்களுக்கு எதிரான வன்மமும் வெள்ளையர்களின் மத்தியில் அதிகரித்திருந்... மேலும் பார்க்க

கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 4

“வெள்ளைக்காரர்களைப் பற்றிய கறுப்பர்களின் மதிப்பீடு இரண்டு வகையாக இருக்கும்.ஒன்று, வெள்ளையர்களைப் போல நாமும் மாற வேண்டும் என்ற ஆசை. இன்னொன்று, வெள்ளையர்களின் இவ்வளவு பிரமாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் இர... மேலும் பார்க்க

"20 கசையடி; கோர்ட் வளாகத்தில் வைத்தே தண்டனை" - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை- 3

பெரும்பாலான அமெரிக்க குடும்பங்களைப் போலவே, மிஷாவ்வின் குடும்பமும் இறுக்கமான கிறிஸ்தவ மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன. அம்மாவின் விருப்பப்படி, மூத்த மகன் லைட்ஃபுட் மிஷாவ் இறை சேவை செய்ய வேண்டும் என்று ச... மேலும் பார்க்க

பிரபல பாதிரியாரின் தம்பி; புத்தகக்கடை நடத்திய எளிய மனிதர் மிஷாவ்- ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை-2

நாத்திகர். இஸ்லாத்தை பின்பற்றும் கறுப்பினத் தலைவர் மால்கம் X-ன் நண்பர்.‘கறுப்பர்களின் மெக்கா’ என்றழைக்கப்படும் ஹார்லெம் நகரில் புத்தகக் கடை நடத்தி வரும் ஒரு வியாபாரி. இதுதான் லூயிஸ் மிஷாவ்வின் அடையாளம... மேலும் பார்க்க

மனித புத்தகம்; அறிவகம்; பேராசிரியர்... - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை -1

தி புரஃபசர் “என்னுடைய பெயர் இவா. சுருக்கமாக இவானிட்டி மிஷேல்.”கட்டிலில் அமர்ந்திருந்த லூயிஸ் மிஷாவ்விடம் (Lewis Michaux) முக மலர்ச்சியோடு கைகுலுக்கினேன். வழக்கத்துக்கு மாறான என்னுடைய அறிமுகத்தால் புரு... மேலும் பார்க்க