ஆவினில் புதிய வகை பால் அறிமுகம்!
மக்கள் விரும்பும் வகையில் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆவின் நிறுவனங்கள் சார்பில் வரும் 18 ஆம் தேதி புதிய வகையான 'கிரீன் மேஜிக் பிளஸ்' பால் அறிமுகம் செய்ய உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உபப்பொருட்கள்
மக்களுக்கு எந்தவித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களிள் தேவையை அறிந்து ஆவின் பால்
மற்றும் பால் உபப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பால் மற்றும் பால் உபப்பொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபப்பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது.
இதையும் படிக்க |பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில், மக்கள் விரும்பும் வகையில் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆவின் நிறுவனங்கள் சார்பில் புதிய வகையான பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆவின் மேலாண் இயக்குநர் சு. வினீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்த நிலையில், மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட புதிய வகையான 'கிரீன் மேஜிக் ப்ளஸ்' பால் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆவின் நிறுவனங்களில் வரும் 18 முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.