400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்! வரலாற்றில் முதன்முறை..!
தென் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை டெல்டா கரையில் நகர்ந்து, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், வால்பாறை வழியாக அரபிக்கடல் சென்றடையும் என்று தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, சென்னை, காவிரி படுகை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.