Elon Musk: எகிறிய மஸ்க்கின் சொத்து மதிப்பு; எவ்வளவு தெரியுமா? - இவருக்கு அடுத்த இடங்களில் யார் யார்?
எலான் மஸ்க் அடுத்த சாதனைக்குள் கால் அடி எடுத்து வைத்திருக்கிறார். சாதனை என்றால் உலகத்தில் இதுவரை யாரும் தொட்டிராத இடத்தை அடைந்துள்ளார்.
என்ன பில்டப் எல்லாம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறதா... எப்படி பில்டப் அதிகமாக இருக்கிறதோ, அதை விட அதிகமோ அதிகமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு எகிறியுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. உலகில் ஒருவரின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர் தாண்டுவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்திய ரூபாய் மதிப்பின் படி, 400 பில்லியன் டாலர் என்பது 400 நூறு கோடிகள் ரூ. 33,947,75,94,80,000 ஆகும்.
இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் மார்க் சக்கர்பெர்க், லாரி இல்லிசன், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் உள்ளனர். ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 249 பில்லியன் டாலர் மற்றும் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 224 பில்லியன் டாலர்கள் ஆகும்.