செய்திகள் :

Bill Gates : `உங்களின் சம்பள எதிர்பார்ப்பு என்ன?' - இன்டர்வியூவில் பில் கேட்ஸ் சொன்ன பதில் தெரியுமா?

post image

கம்ப்யூட்டர் உலகத்தை ஆளும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பில் கேட்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்பொழுது உலகின் பில்லியனர்களில் ஒருவராக விளங்கும் இவர், ஒரு காலத்தில் உலகின் பெரும் பணக்காரராக இருந்தவர் ஆவார். இந்நிலையில் இவர் தன்னுடைய பணி அனுபவத்தினையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவிய போது ஏற்பட்ட அனுபவத்தினையும் மக்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பொதுவாக வேலை தேடுவோர் நிறுவனங்களுக்கு நேர்காணலுக்கு செல்லும் பொழுது கேட்கப்படும் கேள்வியாக “உங்களின் சம்பள எதிர்பார்ப்பு என்ன?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இந்த கேள்வியை அதிகம் பேர் தங்களுடைய நேர்காணலில் எதிர்கொண்டு இருப்பீர்கள். ஒரு சிலர் இந்த கேள்விகளுக்கு தாங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தையும் தெரிவித்து இருப்பீர்கள். ஆனால் இந்த கேள்விக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ்

“உங்களின் சம்பள எதிர்பார்ப்பு என்ன?” என்ற கேள்விக்கு

பதில் கூறிய அவர், ``நிறுவனத்தின் சம்பள பேக்கேஜ் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னால் ரிஸ்க் எடுக்க முடியும். நிறுவனத்திற்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை நான் உணர்கிறேன். சம்பளத்தை பணமாக பெறுவதை விட நிறுவனத்தின் பங்குகளாக பெற விரும்புகிறேன். வேறு சில நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் என்னை நியாயமாக நடத்துங்கள். எனது விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.” என்று கூறுகிறார்.

சம்பளத்திற்கு பதிலாக ஒரு நிறுவனத்தின் பங்குகளை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறுவதின் மூலம் நேர்காணல் செய்பவருக்கு தான் ஒரு ரிஸ்க் எடுப்பவர் என்பதை உணர்த்துகிறார் பில் கேட்ஸ். அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீதும் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மீதும் நம்பிக்கை கொண்டவர் என்பதை இந்த பதில் மூலம் உணர்த்துகிறார். வேறு சில நிறுவனங்களில் அதிகம் சம்பளம் தரப்படுகிறது என்று நான் கேள்விப்படுகிறேன் என்று கூறுவதன் மூலமாக தன்னைத்தானே தனித்துவமாக காட்டிக்கொள்கிறார். மேலும் நேர்காணல் செய்பவருக்கு இந்த நிறுவனத்திற்கு இவர் தேவைப்படுகிறார் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறார் பில் கேட்ஸ்.

இன்டர்வியூ

“நாங்கள் ஏன் உங்களை வேலைக்கு எடுக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு ஒரு மென்பொருள் நிபுணராக பதில் கூறி உள்ளார்.

“நான் எழுதிய கோடிங்கை (Coding) முதலில் பாருங்கள். எனது சாஃப்ட்வேர் கோடிங் திறமையை வகுப்புகளில் கற்றுக் கொண்டதை விட அதிகமாக பணி நிறுவனங்களில் வெளிப்படுத்துவேன். காலப்போக்கில் எனது திறமையை மேலும் அதிகப்படுத்திக் கொண்டே தான் இருப்பேன். எனது வருங்கால நோக்கமும் அதுதான். நான் என்னுடைய குழுவுடன் சிறப்பாக பணியாற்றுவேன். தனியாகப் பணியாற்றுவதை காட்டிலும் குழுவுடன் பணியாற்றுவதை விருப்பமாக கொள்கிறேன்.” என்று பதில் கூறுகிறார்.

இந்த பதிலின் மூலம் அவர் எவ்வாறு அவருடைய திறமையை வளர்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் குழுவுடன் பணியாற்றுவதை விரும்புவதின் மூலம், தான் மற்றவர்களுடன் இணைந்து நன்றாக பணியாற்ற முடியும் என்பதை நேர்காணல் செய்பவருக்கு உணர்த்துகிறார் பில் கேட்ஸ்.

Thangamayil: வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தங்க மயில் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ

மதுரையில் நகை விற்பனை நிறுவனத்தில் முதன்முறையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தங்கமயில் நிறுவனத்தில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது இந்நிகழ்வில் தங்கமயில் இணை நிர்வாக இயக்குனர் பா. ரமேஷ் அவர்கள் ரோபோ ச... மேலும் பார்க்க

Nippon Paint: சமூக சுவர் ஓவியம் மூலம் மாணவர்களுடன் இணையும் நிப்பான் பெயின்ட்

இன்க்லிங்க் அறக்கட்டளை மற்றும் HLC இன்டர்நேஷனல் ஸ்கூல், தாலம்பூர் இணைந்து நடத்திய ஆர்ட் அட் ஹார்ட் முன்முயற்சி.மாணவர்களின் படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் ஒத்துணர்வு திறனை வளர்க்கும் முயற்சியில் ... மேலும் பார்க்க

Nippo Swooper: கொசுக்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க நிப்போ நிறுவனம் அறிமுகம்

அதி நவீன கொசு விரட்டியான "நிப்போ ஸ்வூப்பர்" பிராண்டை வெளியிடுவதன் மூலம் நிப்போ இப்போது வீட்டுப் பராமரிப்பு வகைக்குள் நுழைகிறது.அன்டர்டாக் (Underdog)-ன் ஒத்துழைப்போடு திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பிரச்சார... மேலும் பார்க்க