147 ஆண்டுகளுக்குப் பின்.. கவாஸ்கர், குக் சாதனையை சமன் செய்வாரா கோலி?
சென்னையில் மாலைக்குப் பின் மழை இருக்காது!
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் இன்று சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்வோம்..
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் அடிக்கடி விட்டு விட்டு மாலை வரை மழை பெய்யும். அதன்பிறகு மழை குறைவதற்கு வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரும்பாலான உள் மாவட்டங்கள், கோவையைச் சுற்றியுள்ள கொங்கு மண்டலம், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் தமிழ்நாட்டிற்கு இது ஒரு நல்ல நாள் என்று அவர் கூறியுள்ளார்.