செய்திகள் :

Delhi: ``தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ₹2100'' -அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

post image

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மாநில அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை அறிவித்தது. அதோடு அதனை உடனடியாக செயல்படுத்தவும் செய்தது. விண்ணப்பித்த பெண்கள் அனைவருக்கும் ஆவணங்கள் எதையும் சோதனை செய்யாமல் வங்கிக்கணக்குகளில் பணத்தை வரவுவைத்தனர். அதோடு, தேர்தல் முடிந்த பிறகு இத்தொகை ரூ.2100 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும் பா.ஜ.க கூட்டணி அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அர்விந்த் கெஜ்ரிவால் மதுபானக்கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டதால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாதம் ஆயிரம் ரூபாயே இன்னும் வழங்காத நிலையில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அதனை 2100 ரூபாயாக அதிகரித்துக் கொடுப்போம் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது ஒருபுறம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்விந்த் கெஜ்ரிவால்

Mahila Samman Yojana: டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,'' மார்ச் மாதமே பெண்களுகளின் வங்கிக்கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டோம். ஆனால் என்னை கைது செய்து அத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் சதி செய்துவிட்டார்கள். அடுத்த 10-15 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. எனவே, இப்போது பணத்தை பெண்களின் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வர் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக 1000 ரூபாய் போதுமானது இல்லை என்று சில பெண்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பெண்களுக்கு மாதம் 2100 ரூபாய் கொடுக்கப்படும். இதற்காக பெண்கள் நாளையில் இருந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், அவர்களின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்று கெஜ்ரிவால் தெரிவித்ததார்.

45 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்

தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டம் என்று பா.ஜ.க கூறுவதை நிராகரித்த கெஜ்ரிவால், பெண்கள் சமுதாயத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இதனை தான் பார்ப்பதாக தெரிவித்தார். இதற்கு பணம் எங்கிருந்து வரும் என்று பா.ஜ.கவினர் கேட்கின்றனர். நாங்கள் கடந்த 2015ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இலவச மின்சாரம் கொடுப்போம் என்று சொன்னோம். அதனை செய்து காட்டினோன். நான் பா.ஜ.கவிற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் மாயாஜாலம் செய்யக்கூடியவன்''என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவால், அதிஷி

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திரா,''பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு கெஜ்ரிவால் பதிலளிக்கவேண்டும். பஞ்சாப்பில் எத்தனை பெண்களின் வங்கிக்கணக்கிற்கு பணம் சென்றுள்ளது. டெல்லியில் இப்போது தேர்தல் வருவதால் லாலிபாப் கொடுக்கிறீர்கள்''என்றார்.

பஞ்சாப் முதல்வர் மான் இது குறித்து கடந்த மாதம் அளித்த பேட்டியில், பெண்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். டெல்லியில் இத்திட்டத்தை செயல்படுத்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநில அரசு ரூ.2000 கோடியை ஒதுக்கி இருந்தது. வரி செலுத்தும் பெண்களுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு மாநில ஆளுநர் சக்சேனா ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அதோடு, இத்திட்டத்தை செயல்படுத்தால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்று டெல்லி நிதித்துறை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் டெல்லியில் 45 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Diabetes: சிறுதானியங்களும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா..? ஆய்வு சொல்வதென்ன?

’எனக்கு டயாபடீஸ் இருக்கு. அரிசி, சப்பாத்தியைத் தவிர்த்திட்டு சிறுதானியங்களை உணவுல சேர்த்துக்க ஆரம்பிச்சிட்டேன். இனிமே, எனக்கு ரத்தத்துல சர்க்கரை அளவு அதிகரிக்காது’ என்று நினைக்கிறீர்களா..? உங்களுக்குத... மேலும் பார்க்க

கொடி கம்ப விவகாரம்: `அதிகாரிகள் மீது தாக்குதல்' - விசிகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 21 பேர் மீது 8 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமாவளவன் மதுரை வந்திருந்தபோதுகடந்த 8-ஆம் தேதி மதுரை வந... மேலும் பார்க்க

Doctor Vikatan: டி.விக்கு அருகில் உட்கார்ந்து பார்ப்பது பார்வையை பாதிக்குமா?

Doctor Vikatan: என்குழந்தைக்கு 8 வயதாகிறது. எப்போதும் டி.விக்கு மிகவும் அருகில் உட்கார்ந்தபடியே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான். சொன்னால் கேட்க மறுக்கிறான். இப்படி டி.விக்குநெருக்கமாக உட்கார்ந்து பார்ப்பத... மேலும் பார்க்க

``என்னப்பா அதானியைப் பற்றி பேசியதும் பவர் கட் ஆகுது!'' - பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழிசை

இந்திய தொழிலதிபர் அதானி, சூரிய சக்தி மின்சாரத்தை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிம... மேலும் பார்க்க

Doctor Vikatan: பயிற்சி மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதலாமா?

Doctor Vikatan: பயிற்சி மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதலாமா...அவர்கள் மட்டுமே தரும் மருத்துவ ஆலோசனைகள் போதுமானவையா... சீனியர் மருத்துவர் பார்க்க வேண்டாமா?பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீர... மேலும் பார்க்க

Tvk Vijay: ``விஜய்யின் அரசியல் நகர்வு நல்லா இருக்கு'' - தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

அண்மையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜய் உரையாற்றியிருந்தார்.அதில் ஆளும் கட்சியை விமர்சித்துப் பேசியும், அதன் கூட்டணிக் கட்சியான வி.சி.க. தலைவர் தொல்.திரு... மேலும் பார்க்க