செய்திகள் :

``என்னப்பா அதானியைப் பற்றி பேசியதும் பவர் கட் ஆகுது!'' - பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழிசை

post image

இந்திய தொழிலதிபர் அதானி, சூரிய சக்தி மின்சாரத்தை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு வெளியானதும், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இதுதொடர்பாக பேசியதாகத் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

ஸ்டாலின் , அதானி

இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதானியை முதலமைச்சர் சந்திக்கவேயில்லை என்றும், பொய் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ``அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை. நானும் அவரைப் பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாரும் அதானியைச் சந்திக்கவில்லையா என்பதை முதலமைச்சர் விளக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். முன்னதாக, பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை பாரதியார் சிலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், அதானி குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, `` `நான் சந்திக்கவில்லை' என்றுதான் முதலமைச்சர் சொல்கிறார். தன் குடும்பத்தைச் சார்ந்த யாரும் சந்திக்கவில்லையா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். அதுதான் தமிழக மக்களின் விருப்பம்." என்று கூறினார்.

மேலும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோது ஒரு நொடி மின்விளக்கு அணைந்து எரிந்தபோது, ``என்னப்பா அதானியைப் பற்றி பேசியதும் பவர் போய்டுது. மின்சாரத்துறை அமைச்சருக்கும் இதற்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போலிருக்கு." என்று சிரித்துக்கொண்டே பேசி அங்கிருந்து நகர்ந்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

கொடி கம்ப விவகாரம்: `அதிகாரிகள் மீது தாக்குதல்' - விசிகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 21 பேர் மீது 8 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமாவளவன் மதுரை வந்திருந்தபோதுகடந்த 8-ஆம் தேதி மதுரை வந... மேலும் பார்க்க

Doctor Vikatan: டி.விக்கு அருகில் உட்கார்ந்து பார்ப்பது பார்வையை பாதிக்குமா?

Doctor Vikatan: என்குழந்தைக்கு 8 வயதாகிறது. எப்போதும் டி.விக்கு மிகவும் அருகில் உட்கார்ந்தபடியே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான். சொன்னால் கேட்க மறுக்கிறான். இப்படி டி.விக்குநெருக்கமாக உட்கார்ந்து பார்ப்பத... மேலும் பார்க்க

Doctor Vikatan: பயிற்சி மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதலாமா?

Doctor Vikatan: பயிற்சி மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதலாமா...அவர்கள் மட்டுமே தரும் மருத்துவ ஆலோசனைகள் போதுமானவையா... சீனியர் மருத்துவர் பார்க்க வேண்டாமா?பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீர... மேலும் பார்க்க

Tvk Vijay: ``விஜய்யின் அரசியல் நகர்வு நல்லா இருக்கு'' - தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

அண்மையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜய் உரையாற்றியிருந்தார்.அதில் ஆளும் கட்சியை விமர்சித்துப் பேசியும், அதன் கூட்டணிக் கட்சியான வி.சி.க. தலைவர் தொல்.திரு... மேலும் பார்க்க

US: `அமெரிக்க நீதித்துறை முக்கியப் பதவியில் இந்திய வம்சாவளி பெண்' - டிரம்ப் பரிந்துரை!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்மீத் கே தில்லானை, நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக பரிந்துரைத்திருக்கிறார். இது தொடர்... மேலும் பார்க்க

அடையாறு வெள்ளம்... வரதராஜபுரத்துக்கு வருவதை தடுப்படி எப்படி? கோரிக்கை வைக்கும் மக்கள்!

சென்னை, தாம்பரம் அருகே வரதராஜபுரம் மற்றும் எருமையூர் உள்ளன. அப்பகுதியில் கனமழை பொழியும்போது முறையான மழைநீர் வடிகால்கள் இல்லாததால், அடையாறு ஆற்றில் செல்ல வேண்டிய உபரி நீர் வெளியேற முடியாததால் வெள்ளம் ஏ... மேலும் பார்க்க