செய்திகள் :

3 கெட்ட குரங்குகள் வதந்திகளை பேசி பணம் சம்பாதிக்கிறார்கள்: நயன்தாரா குற்றச்சாட்டு

post image

நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள், பாடலை பயன்படுத்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வேண்டுமென்றே அனுமதி வழங்கமால் காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் வெளியிட்டிருந்தார்.

இது குறித்து யூடியூப்பில் நயன்தாராவுக்கு எதிராகவும் தனுஷுக்கு ஆதராவகாவும் சில யூடியூப்பர்கள் பேசினார்கள்.

நேர்காணல் ஒன்றில் நடிகை நயன்தாரா இது குறித்து பேசியதாவது:

யூடியூப்பில் 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு 50 எபிசோடுகள் வெளியிட்டால் அதில் 45 என்னைக் குறித்ததாகவே இருக்கும். ஏனென்றால் என்னைக் குறித்து பேசினால் அதிகமான பார்வைகள் கிடைத்து அதனால் பணம் சம்பாதிக்கிறார்கள். என்னை வைத்து அல்லது எனது பெயரினால் மற்றவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.

வதந்திகளை மட்டுமே பேசி அந்த மூவர் பணம் சம்பாதிக்கிறார்கள். நான் அவர்களை தேவையில்லாமல் பிரபலம் ஆக்குகிறேன்.

நாம் 3 குரங்குகள் குறித்து கேள்வி பட்டிருக்கிறோம். பொய் பேசாது, தவறானதை கேட்காது, தவறானதை பார்க்காது. ஆனால், இந்த 3 குரங்குகள் அதற்கு எதிராக இருக்கும். பொய் மட்டுமே பேசும், தவறானதை மட்டுமே கேட்கும், தவறானதையே பார்க்கும்.

பேச்சு என்று பெயர் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான கோமாளிகள். அவர்கள் அங்கேயேதான் இருப்பார்கள். ஆனால், என்னைக் குறித்து அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது போலவே பேசுவார்கள் என்றார்.

காதலரை மணந்தார் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன் காதலரை திருமணம் செய்துகொண்டார்.கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திரும... மேலும் பார்க்க

திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கொட்டும் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம... மேலும் பார்க்க

கூலி புதிய அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கான கூலி அப்டேட் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.படத... மேலும் பார்க்க

செல்வராகவன் - ஜி. வி. பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்!

இயக்குநர் செல்வராகவன்புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநராக விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற செல்வராகவன் சில காலம் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு திரைப்படங... மேலும் பார்க்க

2030 கால்பந்து உலகக் கோப்பை குறித்து ரொனால்டோ நெகிழ்ச்சி..!

கால்பந்து உலகக் கோப்பை 2030ஆம் ஆண்டுக்கான போட்டிகளை போர்ச்சுகல் உள்பட 5 நாடுகள் நடத்த அனுமதி கிடைத்தது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2034ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப... மேலும் பார்க்க

சீதாவாக நடிக்க அசைவம் சாப்பிடவில்லையா? ஆவேசமான சாய் பல்லவி!

தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நடிகை சாய் பல்லவி எச்சரித்துள்ளார்.நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் ... மேலும் பார்க்க