செய்திகள் :

சீதாவாக நடிக்க அசைவம் சாப்பிடவில்லையா? ஆவேசமான சாய் பல்லவி!

post image

தவறான தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நடிகை சாய் பல்லவி எச்சரித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து தனக்கென நல்ல வணிகத்தை உருவாக்கினார்.

முக்கியமாக, ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் விராத பர்வம் படங்களில் தன் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார். இயக்குநர் மணிரத்னம் தனக்குப் பிடித்த நாயகி என பேசும் அளவிற்கு கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இறுதியாக, இவர் நடித்த அமரன் திரைப்படம் இந்தியளவில் கவனிக்கப்பட்டதுடன் ரூ. 300 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கலங்கடித்தார் சாய் பல்லவி.

இதையும் படிக்க: விவாகரத்தை அறிவித்தார் சீனு ராமசாமி!

அடுத்ததாக, மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ’ராமாயணா’ படத்தில் சீதாவாக நடிக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் இராவணனாகவும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபல சினிமா இணைய இதழ் ஒன்று, “சாய் பல்லவி ராமாயணா படத்தில் சீதாவாக நடிப்பதால் அசைவம் சாப்பிடுக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். படப்பிடிப்பு முடியும்வரை உணவகங்களில் சாப்பிடாமல் எங்கு சென்றாலும் இவர் அழைத்துச் செல்லும் சமயல்காரர்கள் சமைக்கும் சைவ உணவையே சாப்பிடுகிறார்” எனத் தெரிவித்திருந்தது.

இதைப் பகிர்ந்த சாய் பல்லவி, “நோக்கத்துடனோ அல்லது நோக்கமில்லாமலோ (கடவுள் அறிவார்) கூறப்படும் ஆதாரமற்ற புரளிகளுக்கும், பொய்களுக்கும், தவறான கூற்றுகளுக்கும் நான் எப்போதும் அமைதியாகவே இருந்திருக்கிறேன். ஆனால், இது தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் இப்போது எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. இனிமேல் என்னைப் பற்றிய கட்டுக் கதைகளை, புரளிகளை எந்தவொரு ஊடகமோ, தனிநபரோ பரப்பினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவியின் இக்கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஜெய் ஸ்ரீராம் பயங்கரவாதமா? மீண்டும் சர்ச்சையில் சாய் பல்லவி!

திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கொட்டும் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம... மேலும் பார்க்க

கூலி புதிய அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கான கூலி அப்டேட் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.படத... மேலும் பார்க்க

செல்வராகவன் - ஜி. வி. பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்!

இயக்குநர் செல்வராகவன்புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநராக விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற செல்வராகவன் சில காலம் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு திரைப்படங... மேலும் பார்க்க

3 கெட்ட குரங்குகள் வதந்திகளை பேசி பணம் சம்பாதிக்கிறார்கள்: நயன்தாரா குற்றச்சாட்டு

நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.இதில் நானும் ரௌடிதான் ப... மேலும் பார்க்க

2030 கால்பந்து உலகக் கோப்பை குறித்து ரொனால்டோ நெகிழ்ச்சி..!

கால்பந்து உலகக் கோப்பை 2030ஆம் ஆண்டுக்கான போட்டிகளை போர்ச்சுகல் உள்பட 5 நாடுகள் நடத்த அனுமதி கிடைத்தது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2034ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப... மேலும் பார்க்க

விவாகரத்தை அறிவித்தார் சீனு ராமசாமி!

இயக்குநர் சீனு ராமசாமி விவாகரத்து பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தமிழில் தனித்துவமான இயக்குநர் சீனு ராமசாமி. 2010 இல் இவர் இயக்கிய தென்மேற்குப்பருவக்காற்று திரைப்படம் மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றதுடன் ... மேலும் பார்க்க