`மகாகவியென்றாலே பேராற்றல், பேரதிசயம்...' - வியக்கும் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி!
விவாகரத்தை அறிவித்தார் சீனு ராமசாமி!
இயக்குநர் சீனு ராமசாமி விவாகரத்து பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் தனித்துவமான இயக்குநர் சீனு ராமசாமி. 2010 இல் இவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றதுடன் தேசிய விருதையும் வென்றது.
தொடர்ந்து, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே,, மாமனிதன் படங்களை இயக்கினார். இதில், தர்மதுரை வணிக ரீதியாகவும் விமர்சக ரீதியாகும் வரவேற்பைப் பெற்றது. அடிதடி கமர்ஷியல் சினிமாவுக்குள் சிக்கிக் கொள்ளாமல் மனித உணர்வுகளை பிரதானமாக்கி படங்களை இயக்குவதில் ஆர்வம் உடையவர் சீனு ராமசாமி.
இறுதியாக, கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தை இயக்கினார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: குடும்பஸ்தன் படத்தின் அப்டேட்!
இந்த நிலையில், சீனு ராமசாமி திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அன்பானவர்களுக்கு வணக்கம், நானும் எனது மனைவி ஜி. எஸ். தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலர் அடுத்தடுத்து விவாகரத்தை அறிவித்து வரும் வேளையில் இயக்குநர் சீனு ராமசாமியின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.