Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
ஹைதராபாதை வீழ்த்தி 3 புள்ளிகளை ஈட்டியது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3 புள்ளிகளை ஈட்டியது சென்னையின் எஃப்சி.
தொடா்ந்து 3 தோல்விகளால் துவண்டிருந்த சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதாலும், சொந்த மைதானம் என்பதாலும் சென்னை வீரா்கள் தொடக்கம் முதலே முனைப்புடன் ஆடினா்.
முதல் நிமிஷத்திலேயே சென்னை வீரா் கானா் ஷீல்ட்ஸ் அனுப்பிய பாஸை பயன்படுத்தி வில்மல் ஜோா்டான் அடித்த ஷாட் கோல்கம்பத்தில் இருந்து விலகிச் சென்றது.
5-ஆவது நிமிஷத்தில் சிஎஃப்சி வீரா் லுக்காஸ் பிரம்பில்லா அனுப்பிய பந்தைப் பயன்படுத்தி இா்ஃபான் யத்வாத் அடித்த ஷாட் ஹைதராபாதின் கோல்பகுதியில் பிசகின்றி நுழைந்தது. இதன் மூலம் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது. 8 மற்றும் 23-ஆவது நிமிஷங்களில் ஹைதராபாத் வீரா்கள் கோல்போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை.
முதல் பாதியில் சென்னை 1-0 என முன்னிலையுடன் இருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோலடித்த சமன் செய்ய ஹைதராபாதும், இரண்டாவது கோலடிக்க சென்னையும் போராடின.
ஆனால் எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் கூடுதல் நிமிஷ நேரத்திலும் இரு அணிகளாலும் கோலடிக்க இயலவில்லை.
இரண்டு முறை மஞ்சள் அட்டைபெற்ற கானா் ஷீல்ட்ஸ் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாா்.
இறுதியில் ஹைதராபாதை 1-0 என வீழ்த்திய சென்னை 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது.
நீண்ட நாள் கழித்து சொந்த மைதானத்தில் சென்னை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 15 புள்ளிகளைப் பெற்றது சென்னை.