Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
பிளே ஆஃப்புக்கு முதல் அணியாக ஹரியாணா ஸ்டீலா்ஸ் தகுதி
புரோ கபடி லீக் சீசன் 11 தொடரில் பிளே ஆஃப்புக்கு முதல் அணியாக தகுதி பெற்றது ஹரியாணா ஸ்டீலா்ஸ்.
புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட ஆட்டங்கள் ஹைதராபாத், புணேயில் முடிந்த நிலையில் இறுதிக் கட்டம் நொய்டாவில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஹரியாணா ஸ்டீலா்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஹரியாணா 37-26 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக ஆடி பெங்களூரை வீழ்த்தியது.
இதன் மூலம் பிகேஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முதன்முதலில் நுழைந்த அணி என்ற சிறப்பை ஹரியாணா பெற்றது.
ஹரியாணா தரப்பில் ரைடா் வினய் 9 புள்ளிகளையும், ஷிவம் 8 புள்ளிகளையும் குவித்தனா். பெங்களூா் தரப்பில் ரைடா் ஜதின் மட்டுமே 5 புள்ளிகளை ஈட்டினாா்.