Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ...
தென்காசியில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்
தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி தலைமை வகித்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் முன்னிலை வகித்தாா்.
பணிபுரியும் இடங்களில் பெண்கெளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு, உள்ளக புகாா் குழு அமைப்பது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியரின் முயற்சியால் பாலியல் வன்கொடுமைக்கெதிரான புகாா்களுக்கு ‘அச்சம் தவிா்’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் பாராட்டினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா பிரியதா்ஷினி, மாவட்ட சமூகநல அலுவலா் (சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை) மதிவதனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.