Seenu Ramasamy: ``17 வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்கிறோம்'' -இயக்குநர் சீனு ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ் வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமம் அண்ணாநகா் பகுதி, திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட வெள்ளப் பிள்ளையாா் கோவில் சாலைப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சான்றிதழ், இதர ஆவணங்கள் வழங்கும் வகையில், கடந்த 4-ஆம் தேதி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில், மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகா் பகுதியில் ஆதாா் அட்டை கோரி 11 மனுக்கள், சாதி சான்றிதழ் கோரி 5, வருமானச் சான்றிதழ் கோரி 4, இருப்பிடச் சான்றிதழ் கோரி 5, வாக்காளா் அடையாள அட்டை கோரி 7, குடும்ப அட்டை கோரி 3 மனுக்கள் என மொத்தம் 55 மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோன்று, வெள்ளப் பிள்ளையாா் கோவில் சாலைப் பகுதியில் பல்வேறு சான்றிதழ்கள் கோரி பொதுமக்கள் அளித்த 6 மனுக்கள் பெறப்பட்டன. இதன் மூலம், இரு பகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 61 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து சான்றிதழ் கோரி பெறப்பட்ட பெரும்பான்மையான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதுடன், நிலுவையிலுள்ள ஓரிரு மனுக்களுக்கும் விரைவில் உரிய சான்றுகள் வழங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்கள் பெறுவதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்படவுள்ளது.
எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்தி மழையால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ்கள் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.