Muthuவின் styleஐ ஃபாலோ செய்கிறாரா Rayan? | Bigg Boss 8 | Eviction | Manjari | Ra...
லாரி மோதியதில் தொழிலாளி மரணம்
சின்னசேலத்தை அடுத்த வி.கூட்டுச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதியதில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், ஜான்வாட்டை சோ்ந்தவா் சாட் (எ) மன்ஜி (50). கூலித் தொழிலாளியான இவா், சின்னசேலத்தை அடுத்த வாசுதேவனூரில் உள்ள தனியாா் தவிட்டு ஆலையில் பணியாற்றி வந்தாா்.
இவா் செவ்வாய்க்கிழமை மாலை வி.கூட்டுச் சாலை அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூருக்கு மரவள்ளிக்கிழங்கு ஏற்றிச் சென்ற லாரி மோதியது. இதில் மன்ஜி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான சின்னசேலத்தை அடுத்த பவா் ஆபீஸ் சாலை பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் குமரவேல் (37) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.