செய்திகள் :

``அமெரிக்கா கிளம்பும்போதுதான் அரியர்ஸ் முடித்தேன்!'' - பல்கலை. விழாவில் FeTNA தலைவர் உற்சாக பேச்சு

post image

முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா...

"நான் படிப்பில் சுமார்தான், இக்கல்லூரியில் படித்தபோது அரியர் வைத்து, வேலைக்காக அமெரிக்காச் செல்லும்போது முடித்த மாணவன் நான்" என்று, அமெரிக்காவில் கணினித்துறையில் பணியாற்றிவரும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவராகவும் உள்ள விஜய் மணிவேல் நெகிழ்ச்சியாக பேசியது மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களையும், ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தியது.

கல்லூரி விழாவில் விஜய் மணிவேல்

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவைத் தலைவர் விஜய் மணிவேல் கௌரவிக்கப்பட்டார். துணை முதல்வர் முனைவர் பெரி.கபிலன் அறிமுக உரையாற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் ம.புவனேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார்.

நிறைவாக விஜய் மணிவேல் பேசும்போது, "மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த நான், இக்கல்லூரியில் 95-97 களில் எம்.எஸ்.சி கணினி அறிவியல் படித்தேன். சுமாராகப் படிக்கும் மாணவன்தான், அரியர்ஸ் வைத்திருக்கிறேன், ஆனாலும் ஒரு நம்பிக்கையில் படித்தேன். என் ஆசிரியர்கள் என்னைத் தட்டிக் கொடுத்துப் படிக்க வைத்தார்கள்.

படிப்பை  முடித்ததும் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை, யோசித்தபோது ஒருவித பயம் இருந்தது. ஒரு வழியாக நானும் என் நண்பர்களும் சேர்ந்து வேலை தேடி பெங்களூரு சென்றோம். அங்கு பாதுகாப்புத்துறை (Defence)  கணினிப் பிரிவில் புராஜெக்ட் வேலை பார்த்தோம்.

`அப்துல்கலாம், பொன்ராஜ் வழிகாட்டினார்கள்..'

ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்

அங்கு வேலை செய்யும்போது மறைந்த குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், அவருடன் இருந்த பொன்ராஜ் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் நிறைய ஆலோசனைகள் சொல்லி பயிற்சி அளித்தார்கள். வேலை நேரம் போக வீட்டுக்கு வரச்சொல்லிப் பேசுவார்கள், வழிகாட்டினார்கள். வேலை பார்த்துக்கொண்டே மேலே படிக்கவும் செய்தேன். உயர் கல்வி படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவிலிருந்து வேலை வாய்ப்பு வந்தது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த நேரத்துலதான் என் அரியர்ஸ் பேப்பரை முடித்தேன்.

அமெரிக்கா சென்றபோது எல்லோரையும் போல ஆரம்பத்துல ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனாலும் பிழைக்க வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்ற வேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டிருந்ததால் அங்கு தீவிரமாக உழைக்க ஆரம்பித்தேன்.

American Tamil Academy

மாணவர்களே நீங்கள் உங்களை மட்டும் நம்பி வேலை செய்யுங்கள். ஆங்கில மொழி ஒரு சவாலாக இருக்கும், பேசிப் பேசி கற்றுக்கொள்ளலாம். அது ஒரு பிரச்னை இல்லை.

அதேநேரம் வெளி நாடுகளுக்கு சென்ற பிறகுதான் நம் தாய்மொழியான தமிழின் சிறப்புத் தெரியும். ஏனென்றால் பணி செய்யுமிடத்தில் நம் மொழியைப் பேச யாரும் இருக்க மாட்டார்கள், நம்ம ஊர்க்காரர்களை பார்த்தால்தான் பேசமுடியும். அதுதான் வெளிநாட்டில் வாழும் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கல்லூரி விழாவில்

அதற்குப்பிறகுதான் வேலை நேரம் போக தமிழ் மொழியை வளர்க்கவும், நம் பண்பாடு சார்ந்த விஷயங்களை அங்குள்ள நம் மக்களிடம் கொண்டு செல்லவும் பல தளத்திலும் வேலை செய்யவும் ஆரம்பித்தேன். அமெரிக்கா முழுக்க இருக்கிற தமிழ்ச் சங்கங்களோட சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு அமைந்தது.

அங்குள்ள நம் குழந்தைகள் தமிழ் பேச வாய்ப்புகள் மிகக் குறைவு, பெற்றோர்களின் வேலை மற்றும் வாழ்க்கை முறையிலும் ஆங்கிலம்தான் முக்கியமாக இருந்தது. இதை மாற்ற வேண்டுமென்று நினைத்துதான் தமிழ் மொழி, கலை, இலக்கியம், மரபுக்கலைகளை கற்க உதவிகள் செய்யவும், அதோடு தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள், பள்ளிக்கல்வி, தமிழ் வகுப்புகள் தொடங்குவது, குடும்பத்தில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சங்கடமான சூழல்களை தீர்த்து வைப்பது, திடீர் மரணம் ஏற்படுற சூழலில் உதவுவது என அங்குள்ள தமிழ் மக்களுக்கு நிறைய வேலைகளை நண்பர்களோடு இணைந்து செய்தேன். இதற்காக ATC என்கிற அமெரிக்கத் தமிழ் நிறுவனத்தை (American Tamil Academy) தொடங்கினோம்.

அதுபோல் வட அமெரிக்காவிலுள்ள 62 தமிழ்ச்சங்கங்களை உள்ளடக்கிய வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையில் (FeTNA) பெரிய மாற்றங்களை கொண்டு வந்தோம். சிறப்பான கட்டமைப்பை உருவாக்கினோம். நிறைய தொழில் முனைவோர் மாநாடுகள் நடத்தினோம். எப்போதுமே ஒருவருக்கு கீழ வேலை செய்யாமல், தொழில் முனைவோர்களை உருவாக்குவது எங்கள் நோக்கம். அதற்காக இளைய தலைமுறை ஆர்வலர்களைக் கண்டுபிடித்து தொழில் முனைவோர் ஆக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறோம்.

விஜய் மணிவேல்

மதுரையில் பன்னாட்டு தொழில் முனைவோர் மாநாடு

வருகின்ற ஜனவரி 18-ம்தேதி பன்னாட்டு தொழில் முனைவோர் மாநாடு மதுரையில் முதல் முறையாக நடக்கிறது. ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டுபிடித்து மாநாட்டில் பங்கேற்க வைப்பது, தொழில் முனைவோர்களோடு இணைந்து தொழில் செய்ய வைப்பதுதான் எங்கள் திட்டம்.

தேடல் மற்றும் தன்னம்பிக்கையோடு கடின உழைப்பை செலுத்தி வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் நீங்கள் வெற்றி பெறலாம். வேறு எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு மதுரைக்கு உள்ளது. என்னவென்றால் நாமளும் வாழவேண்டும். மற்றவரையும் வாழ வைக்கவேண்டும் என்கிற எண்ணம்தான் அது. அதுதான் இந்த மண்ணோடு அறம், அதுதான் என்ன இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது. மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும், தொழில் முனைவோருக்கு உதவ வேண்டும் என்றுதான் இப்போது இங்கு வந்திருக்கிறேன்" என்றார்.

``மெரினா போராட்டத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.." -ஜல்லிக்கட்டில் சாதிக்கும் சென்னை வீரா பாய்ஸ்

சென்னையிலும் ஜல்லிக்கட்டு..பொங்கல் வந்தாலே தமிழர்களுக்கு கொண்டாட்டம். அதுவும், தென்மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம். காரணம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் உலகப் ... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் சென்னை; பல வண்ணங்களில் குவிக்கப்பட்ட மண் பானைகள்! | Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டே... மேலும் பார்க்க