Book Fair: "தலித் பெண்களின் உலகம்..." - அழகிய பெரியவனின் நூலுக்கு அட்டைப்படம் வர...
பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அவரது முன்னாள் காங்கிரஸ் பிரமுகருமான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தில்லியில் உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தல் எனும் இடத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி நினைவிடம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பணியாற்றினார்.
மத்திய அரசுக்கு பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கான அரசின் முடிவிற்கு நன்றி தெரிவித்தார்.
அந்தப் பதிவில், “அப்பாவுக்காக மத்திய அரசு நினைவுச் சின்னம் அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எதிர்பார்த்திடாத பிரதமர் மோடியின் இந்தச் செயல் எங்களை மிகவும் சந்தோசப்படுத்தியுள்ளது.
எனது அப்பா அரசு மரியாதையைக் கேட்கக்கூடாது. அரசே வழங்கவேண்டும் என்று கூறுவார். அப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் இந்தச் செயலை செய்ததற்கு, பிரதமர் மோடிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்தச் செயல் விமர்சங்களுக்கு அப்பாற்பட்டது. இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.