செய்திகள் :

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மதகஜராஜா!

post image

விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தின் புதிய டிரைலர் யூடியூப் டிரெண்டுங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.

ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.

இப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக ஜன. 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் பழைய டிரைலரை மீண்டும் வெளியிட்டனர். இந்த நிலையில், இந்த டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

போஸ்டர்.

நடிகர் சந்தானத்தின் காமெடி மற்றும் விஷாலின் ஆக்சன் காட்சிகள் சுவாரஸ்யத்தை தருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார்: தொழிலதிபர் கைது!

கொச்சி : மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்துள்ள பாலியல் புகாரரின் அடிப்படையில் தொழிலதிபர் பாபி செம்மானூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தன்னைக் குறிவைத்து... மேலும் பார்க்க

நேசிப்பாயா பாடல் உருவானது எப்படி? படக்குழு வெளியிட்ட விடியோ!

நேசிப்பாயா படத்தின் தலைப்பு பாடல் அறிவிப்பை குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப... மேலும் பார்க்க

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் பெயர் இதுவா?

சூர்யா - 45 படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷ... மேலும் பார்க்க

ஹிந்தி பிக் பாஸ்: ஸ்ருதிகா வெற்றிக்காக களமிறங்கிய நண்பர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஸ்ருதிகாவுக்கு ஆதரவாக நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா வெற்றி பெற தமிழக ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்... மேலும் பார்க்க

ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: விதிகளை மீறியதால் 2வது நாளே வெளியேறிய ரவீந்தர்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சியை சுராவசியமாக்க முன்னாள் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று நுழைந்த நிலையில், விதிகளை மீறியதால... மேலும் பார்க்க