ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் பெயர் இதுவா?
சூர்யா - 45 படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், த்ரிஷா, ஸ்சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
முக்கியமாக, ஆர். ஜே. பாலாஜி சூர்யாவுக்கு வில்லனாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. சூர்யாவும் இவரும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வருகிறார்களாம்.
இந்த நிலையில், இப்படத்திற்கு ’பேட்டைக்காரன்’ எனப் பெயரிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.