செய்திகள் :

ஹிந்தி பிக் பாஸ்: ஸ்ருதிகா வெற்றிக்காக களமிறங்கிய நண்பர்கள்!

post image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஸ்ருதிகாவுக்கு ஆதரவாக நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா வெற்றி பெற தமிழக ரசிகர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோன்று நடிகை ரோஷினி ஹரிபிரியன், தர்ஷன் உள்ளிட்ட பலரும் ஸ்ருதிகா வெற்றி பெற ரசிகர்களிடம் வாக்கு சேகரித்து விடியோ வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி வாரம் வரை சென்றுள்ளதால், அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என புகழ் உள்ளிட்ட பலர் விடியோவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹிந்தி மொழியில் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் 18 நிகழ்ச்சி, 95 நாள்கள் கடந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளது. இந்த வாரத்தில் நடிகை ஸ்ருதிகா நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ராஜத் தலால், சாசத் பாண்டே ஆகியோருடன் ஸ்ருதிகாவும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.

இதனால், ரசிகர்கள் பலர் ஸ்ருதிகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் புகழ் விடியோ வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா வெற்றிகரமாக பயணித்து வருகிறார். தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ஸ்ருதிகா, ஹிந்தி மக்களிடமும் பிரபலமடைந்துள்ளார். அங்கும் அவர் விரும்பப்படும் நபராக இருப்பதால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் 95 நாள்கள் கடந்துள்ளார். ஸ்ருதிகா வெற்றி பெற அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், ஹிந்தியில் வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயம். பலரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று நடிகை ரோஷினி ஹரிபிரியன், தர்ஷன், குரேஷி உள்ளிட்டோரும் ஸ்ருதிகா வெற்றி பெற ரசிகர்களிடம் வாக்கு சேகரித்து விடியோ வெளியிட்டுள்ளனர்

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.09.01.2025மேஷம்:இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை... மேலும் பார்க்க

டாமி பால், ஜெஸிகா பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான முன்னோட்டமாக நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க போட்டியாளா்களான டாமி பால், ஜெஸிகா பெகுலா ஆகியோா் காலிறுதிச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.ஆட... மேலும் பார்க்க

சிட்னி ‘திருப்தி’; இதர நான்கும் ‘மிக நன்று’ - ஆஸி. ஆடுகளங்களுக்கு ஐசிசி மதிப்பீடு

பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 5 மைதான ஆடுகளங்களின் மதிப்பீட்டை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை வெளியிட்டது.இதில் முதல் 4 ஆட்டங்கள் நடைபெற்ற ப... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா

மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றனா்.முன்னதாக முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஹெச்... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் தொடா் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்க சென்னை மும்முரம்

சொந்த மண்ணில் தொடா் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சென்னையின் எஃப்சி அணி உள்ளது. சொந்த மண்ணில் தொடா் தோல்விகளுக்கு இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக வியாழக்... மேலும் பார்க்க

கோவா - ஹைதராபாத் ‘டிரா’

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா - ஹைதராபாத் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. கோவாவின் மாா்கோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பா... மேலும் பார்க்க