SEBI-யின் புதிய விதிமுறைகள் என்னென்ன தெரியுமா? | IPS Finance | EPI - 107
மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியாக குறைந்துள்ளது.
திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.52 அடியில் இருந்து 117.87 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1307 கனஅடியிலிருந்து 828 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 90.11 டிஎம்சியாக உள்ளது.