ஹிந்தி பிக் பாஸ்: ஸ்ருதிகா வெற்றிக்காக களமிறங்கிய நண்பர்கள்!
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள்!
சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை - சென்னை (எண் 20666) மற்றும் சென்னை - நெல்லை (எண் 20665) இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
இதையும் படிக்க : தில்லி பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
இந்த நிலையில், வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 சேர் கார் பெட்டிகள், 2 எக்ஸிக்யூடிவ் கார் பெட்டிகள் என்ற வகையில் இனிமேல் இயக்கபடவுள்ளது.
அதேபோல், திருவனந்தபுரம் - காசர்கோடு - திருவனந்தபுரம் (எண் 20634/33) இடையே இயக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.