செய்திகள் :

கே.வி. தங்கபாலுவுக்கு காமராசர் விருது: தமிழக அரசு

post image

2024 ஆம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான கே.வி. தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவரின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது.

இதையும் படிக்க | ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

இதுகாறும் 18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் கே.வி.தங்கபாலு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்.

இவ்விருது தமிழ்நாடு முதல்வரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாமலை

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன்... மேலும் பார்க்க

நீலகிரியில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவும்!

நீலகிரி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் இரவு நேரங்களில் உ... மேலும் பார்க்க

ஆரூத்ரா நிதி மோசடி: நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்குகளை விடுவிக்க உத்தரவு

ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்கும்படி, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

ஞானசேகரன் திமுக அனுதாபிதான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் நிச்சயம் திமுக உறுப்பினர் அல்ல, திமுக அனுதாபி, அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில்... மேலும் பார்க்க

100 சார் கேள்விகளை கேட்க முடியும்! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக அமளி; வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 100 சார் கேள்விகளை என்னால் கேட்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசிய பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையிலிருந்து... மேலும் பார்க்க

சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில் வருமான வரித்துறை புதன்கிழம... மேலும் பார்க்க