ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வீர தீர சூரன் வெளியீட்டுத் தேதி இதுதானா?
வீர தீர சூரன் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன்.
தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ‘கிளாசிக்கல் இசையைப் படிங்க அனிருத்..’: ஏ. ஆர். ரஹ்மான் அறிவுரை!
இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடாமுயற்சி, கேம் சேஞ்சர் வெளியீடுகளால் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படத்தை ஜன. 30 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.