திருப்பதியில் பக்தர்கள் பலி: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
சென்னை: சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில் வருமான வரித்துறை புதன்கிழமை காலைமுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க : யார் அந்த சார்? எஃப்ஐஆர் வெளியானதற்கு யார் காரணம்? முதல்வர் பதிலுரை
அதேபோல், தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரி துறை சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.