சபரிமலை: கானகப் பாதை அனுமதி நேரம் குறைப்பு!
சபரிமலை மகரவிளக்கு பூஜையையொட்டி கானகப் பாதையில் பக்தர்களின் அனுமதி ஒருமணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
கானகப் பாதை வழியாக பக்தர்களின் அனுமதி நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சத்திரம் - புல்லுமேடு வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாரம்பரியமிக்க சத்திரம் - புல்லுமேடு கானகப்பாதை வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
சத்திரத்தில் இருந்து புல்லுமேடு, பாண்டித்தாவளம் வழியாக சபரிமலை வரை 12 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த பாரம்பரிய கானகப் பாதை, அடந்த காட்டுப்பகுதி என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், மகர விளக்கு பூஜையையொட்டி ஒரு மணிநேரத்தைக் குறைத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுழைவு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கானகப் பாதை அனுமதி நேரம் குறைப்பு நாளைமுதல் (ஜன. 8) அமலுக்கு வரும் என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | நடப்பாண்டு ஜிடிபி வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சரியும்!